நாடி
வாசிப்பு ஏன் சிறப்பு பெறுகிறது..?
மெய்ஞானம்
பெற்ற மகரிஷிகள் தங்களது உள்ளுணர்வைப் பயன்படுத்தி ஒரு மனிதனின் முழுமையான வாழ்க்கைச்
சுழற்சியில் ஏற்படுத்தப்படும் கர்ம வினைகளை ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளார்கள்.
அவை,
ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய வகையில் பதிவு செய்யப்பட்டு, நேர்மையாக அவர்கள் வாழ்ந்து
இந்த சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில்
மகரிஷிகள் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்கள் குறித்த குடும்பம், தொழில், அவர்களது தனித்தன்மை
ஆகிய விஷயங்களை கணித்து பதிவு செய்துள்ளனர்.
நாடி
படித்தல் என்பது அறிவியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு கர்ம வினைகளைப் பற்றி அறிய உதவும்
வழிமுறையாகும். பெரும் தொகுப்பாக உள்ள நாடிச் சுவடிகளில் பிறப்பெடுத்த அனைத்து மனிதர்களுக்குமான
பலன்கள், இனிமேல் யார், எங்கே பிறக்க உள்ளார் என்பது பற்றியும், அவர்களது வாழ்க்கை
சம்பவங்கள் பற்றியும் நாடி ஜோதிடம் குறிப்பிடுவது போல வெறு எந்த அறிவியலும் குறிப்பிடுவதில்லை.
நாடி
படித்தல் மூலம் புனித யாத்திரை மேற்கொள்தல், பிரார்த்தனைகளில் ஈடுபடுவது, பயபக்தியுடன்
இருப்பது, ஆலயங்களில் தொண்டுகள் புரிவது ஆகிய வழிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டு காலம்காலமாக
தொடரும் பாவங்கள் நீங்குகின்றன.
நாடி சோதிடம்
மேற்கத்திய சோதிட முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது..?
மேற்கத்திய
சோதிடம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான பலன்களை மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால்,
நாடி சோதிடம் என்பது இந்த உலகில் வாழ்ந்து வருபவர்களில், குறிப்பிட்ட ஒரு தனி நபரைப்
பற்றியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த, நிகழ உள்ள சம்பவங்களைப் பற்றியும் தேடிக் கண்டறிந்து
பலன்களை சொல்கிறது. அந்த வகையில் அனைவருக்குமான நாடிச்சுவடிகள் கிடைத்துவிடும் என்று
உறுதியாக சொல்ல இயலாது.
சிவபெருமானிடமிருந்தே
மகரிஷிகள் நாடி சோதிடம் மூலம் தனி மனிதர்களுக்கான பலன்களை பதிவு செய்யும் கால ஞானத்தை
பெற்றார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அவர்களால் நாடியில் குறிப்பிடப்பட்ட
தனி நபர்கள் தான் அவர்களது கர்மாவை அறிந்து கொள்ள முடியும். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே
அவர்களது நாடி கிடைக்கப் பெறுகிறது. அந்த வகையில் நீங்கள் உங்களது கர்ம பலன்களை அறிந்து
கொள்ள விரும்பினால், அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கும்
வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில்,
முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட வயதில், கர்ம விதிப்படி
அவர் நாடி சோதிடரை அணுகி தனக்கான பலன்களை அறிந்து கொள்வார் என்பது இந்தப் பேரண்டத்தின்
விதியாக குறிப்பிடப்படுகிறது.
வேத
ஜோதிடம் முற்றிலும் கணித அடிப்படையில், ஜோதிடரின் கணக்கீடுகளைக் கொண்டு பலன்கள் சொல்லப்படும்
முறையாகும். அந்த வகையில் ஒருவரது பிறந்த நாள், பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின்
அடிப்படையில் ஜாதகம் கணித்து, அதில் இடம்பெற்றுள்ள நவக்கிரக நிலைகளை கணக்கிட்டு வேத
ஜோதிட முறையில் பலன்கள் சொல்லப்படுகின்றன. ஒருவரது ஜாதக ரீதியாக அமைந்துள்ள கிரக நிலைகள்,
கோச்சாரம் மற்றும் திசா புக்தி ஆகியவற்றுக்கேற்பவே பரிகாரங்களும் குறிப்பிடப்படுகிறது.
ஜோதிடரின் அனுபவம், பயிற்சி மற்றும் நவக்கிரகங்கள் எந்தெந்த நட்சத்திர சாரங்களில் உள்ளன
என்ற அடிப்படையை வேத ஜோதிடம் சார்ந்துள்ளது.
ஆனால்,
நாடி சோதிடம் என்பது மகரிஷிகளின் ஞான திருஷ்டி சக்தி மூலம் மனித வாழ்வின் கர்மப் பதிவுகளை
கண்டறிந்து, அவற்றை ஓலைச்சுவடி பதிவுகளாக அளித்துள்ளார்கள். அவ்வகையில் ஒருவருக்கான
சரியான ஓலைச்சுவடியை தேடிக்கண்டறிந்து, அவருக்கான பலன்களை அறிவதில், அனுபவமும், தேர்ச்சியும்
பெற்ற நாடி சோதிடரின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால், பரிகார முறைகள் கர்ம வினை
மற்றும் அவற்றின் எதிர்வினை ஆகியவற்றின் அடிப்படையில் பலன் அறிந்து உரைக்கப்பட வேண்டும்.
ஆன்லைன்
மூலமாக நாடி சோதிட பலன்களை அறிந்து மகிழ்ச்சியான, இனிமையான வாழ்க்கையைப் பெற வாடிக்கையாளர்களுக்கு 'திரிகாலா' துணை செய்கிறது.
ஆம். முற்றிலும் உண்மையே. ஏனென்றால் ஒரு தனி மனிதருடைய பெருவிரல் ரேகை பதிவைப் பெற்று அதன் அடிப்படையில் தேடிக் கண்டறியப்பட்ட ஓலைச்சுவடி மூலம் பலன்கள் படிக்கப்படுகின்றன. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் மகரிஷிகளின் திருக்கரங்களால் எழுதப்பட்டவை என்பதால், அதில் சொல்லப்பட்ட உண்மைகளின் நம்பகத்தன்மை குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அப்படி ஒருவருக்கு ஏற்ற பொருத்தமான நாடியை தேடிக்கண்டறிந்து, பலன் உரைக்க திறன் பெற்ற நாடி சோதிடரால் மட்டுமே முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். எதிர்கால பலன் அறிய உதவும் எவ்விதமான தெய்வீக முறையானாலும் அதில் ஒருவருக்கு நம்பிக்கை இருப்பது மிக முக்கியம்.
முற்பிறவி பாவ கர்மங்களால் பாதிக்கப்படாமல் உள்ளவர்களுக்கே நாடி கிடைத்து அதன் மூலம் படிக்கப்படும் பலன்களும் உண்மையாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த உண்மை குறித்து மகரிஷி அகஸ்தியரும் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட பாவ கர்ம வினைகள் நீங்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய தீர்க்கமான வழிமுறைகளையும் அவர் அருளி இருக்கிறார். அவ்வாறு பாவ கர்மா தீர்வதற்கான வழிமுறைகளை சரியாகக் கடைபிடித்த பின்னர் நாடி படிக்கப்படும்போது அதற்கான பலன்கள் சம்பந்தப்பட்டவருக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.